• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி சுட்டுக்கொலை!

ByP.Kavitha Kumar

Jan 25, 2025

ஹரியாணாவில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியாணா மாநிலம், அம்பலா மாவட்டத்தின் நரயின்கார் பகுதியில் பசக நிர்வாகியான ஹர்பிலாஸ் சிங் ராஜுமஜ்ரா அவரது நண்பர்களான புனித் மற்றும் குகல் ஆகிய இருவருடன், நேற்று (ஜன.24) மாலை அவர்களது காரில் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த இரண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் காரில் இருநதவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இந்த தாக்குதலில் ஹர்பிலாஸ் மற்றும் புனித் ஆகிய இருவரின் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்தனர். உடனடியாக இருவரும் மீட்கப்பட்டு சண்டிகரிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த ஹர் பிலாஸ் சிங் ராஜுமஜ்ரா நேற்று இரவு பரிதாபமாக பலியானார். படுகாயமடைந்த புனித் தற்போது நலமாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, கடந்த 2024-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்மக் கும்பலால்ல் வெட்டி படுகொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.