திண்டுக்கல் M.V.M. கல்லூரி மேம்பாலம் அடியில் வீடற்ற பலர் தங்கியுள்ளனர். அவர்களில் சிலர் உடம்பில் சாட்டை அடித்து யாசகம் பெறும் தொழில் செய்து வருகின்றனர்.

இங்கு வசிக்கும் பெண் கர்ப்பமானார் அவரது கணவர் மனைவிக்கு வளைகாப்பு நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார். அந்தப் பெண்ணுக்கு தாய், தந்தையை இல்லாததால் இதை கவனித்த தன்னார்வ மகளிர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

திண்டுக்கல் R.M.காலனியில் உள்ள தேசிய சேவா சமிதி முத்துலட்சுமி வளாகத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு அலங்காரம் செய்து சீர்வரிசை தட்டுடன் 9 வகையான உணவுகள் தயார் செய்து வளைகாப்பு நடத்தினர்.




