• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரியில் அய்யா வைகுண்டர் வசந்த மண்டபம் விஜய் வசந்த் எம்.பி திறந்து வைத்தார்

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது சொந்த செலவில் கட்டப்பட்ட அய்யா வைகுண்டர் வசந்த மண்டபத்தை திறந்து வைத்தார்.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது சொந்த செலவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் அந்த வகையில் சுவாமி தோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில்உள்ள கலையரங்கத்திற்கு ரூ. 5லட்சம் செலவில் மேற்கூரை அமைத்து கொடுத்துள்ளார். இன்று அன்புவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூஜிதகுரு பாலபிரஜாபதி அடிகளார் அந்த கலையரங்கத்திற்கு முன்னாள் எம். பி மறைந்த வசந்தகுமார் நினைவாக அய்யா வைகுண்டர் வசந்த மண்டபம் என பெயர்சூட்டி இன்று திறந்து வைக்கப்பட்டது. கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தார். பின்பு அந்த மண்டபத்தில் நடைபெற்ற குமரி மக்கள் பாரம்பரிய உணவு திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த இயற்கை உணவு பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கண்காட்சி விற்பனையை பார்வையிட்டார். முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களை பால்மா நிர்வாகிகள் பனை ஓலை தொப்பி அணிவித்து வரவேற்றனர்.


பூஜித பால பிரஜாபதி அடிகளார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க பொதுச்செயலாளர் தோமஸ் பிராங்கோ முன்னிலை வகித்தார். மலர் கூட்டமைப்பு உப தலைவர் ஜாண்சிலிபாய் வரவேற்றார் குமரி மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஷீலாஜாண் விழாவை தொடங்கி வைத்தார்.