புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் இன்று பொதுமக்களுக்கு தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்த நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா புதுக்கோட்டை மாவட்ட நீதிபதிகள் கலந்து கொண்டு தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர் பேரணி மற்றும் மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் காவல்துறையினர் மற்றும் இளைஞர்கள் பொதுமக்கள் என ஐம்பதுக்கு மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் செல்லம் இரண்டு பேரும் தலைக்கவசம் அணிந்து கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு பேரணி புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் இருந்து துவங்கிய பேரணி அண்ணாசலை கீழ ராஜவீதி பிருந்தாவனம் பழனியப்பா கார்னர் வழியாக மீண்டும் நீதிமன்ற வளாகத்தை வந்தடைந்தது.


மேலும் நீதிமன்ற வளாகத்தை பசுமையாக்கும் விதத்தில் நீதிபதிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் வழக்கறிஞர் சங்கத்தினர் அனைவரும் சேர்ந்து பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டு வைத்தனர் மேலும் தலைக்கவசம் அணிவது குறித்த துண்டு பிரசுரங்களை ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் வழங்கி தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.




