

மதுரையில் உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
மதுரையில் ஜூன் 26 உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணிக்கான ஏற்பாட்டினை மதுரை பீஸ் மதுபோதை மனநிலை சிகிச்சை மையம் மற்றும்போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு இணைந்து போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியைபீஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் சரவணன் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஸ் சேகர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த பேரணியில் பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் ரெட்கிராஸ் உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர் கலந்து கொண்டனர்இந்த பேரணியில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் போதை ஒழிப்பு போதை விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி சென்றனர் மற்றும் போதை விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர் இப்பேரணி மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் ஆரம்பித்து ரேஸ்கோர்ஸ் விளையாட்டு மைதானத்தில் முடிவுபெற்றது அங்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு
உறுதிமொழியை மாணவர்கள் மாணவிகள் எடுத்துக்கொண்டனர்இப்பேரணியில் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
