மேற்குவங்கம் மாநில கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து சைக்கிள் பேரணி மேற்கொள்ளும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை வரவேற்று நாளை மெரினா கடற்கரையில் பிரம்மாண்ட கடலோர பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும்
சைக்கிள் பேரணியில் வருபவர்கள் வழியில் உள்ள மீனவர்கள் மற்றும் உள்ளுர் வாசிகளை சந்தித்து கடற்கரை வளம், சமூக விரோதிகள் ஊடுரவலை எப்படி தடுப்பது, எவ்வாறு பாதுகாப்புடன் இருப்பது, சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு பணிகள் போன்றவை குறித்து எடுத்துறைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்
சென்னை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை டிஐஜி அருண் சிங் பேட்டி
சிஐஎஸ்எஃப் என அழைக்கப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் பாதுகாப்பான கடற்கரைகள் வளமான பாரதம் என்னும் தலைப்பில் கடலோர சைக்ளோத்தான் எனும் சைக்கிள் பேரணியை கடந்த 7 ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையின் ராஜாத்திய சோழன் மண்டல பயிற்சி மையத்திலிருந்து தொடங்கினர் இந்த பேரணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோடி அசைத்து துவக்கி வைத்தார்,
மேற்கு கடற்கரை தடத்தில் குஜராத்திலிருந்து கன்னியாகுமரி வரையிலும், கிழக்கு கடற்கரை தடத்தில் மேற்கு வங்கத்தில் இருந்து கன்னியாகுமரி வரையிலும் 11 மாநிலங்கள் வழியாக மேற்கொள்ள உள்ள இந்த சைக்லாதானில் 14 பெண்கள் உட்பட 125 மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கலந்து கொண்டு கடற்கரையை ஒட்டிய பாதையிலேயே 6553 கிலோமீட்டர் 25 நாட்கள் பயணிக்கின்றனர்.
இந்த நிலையில் மேற்குவங்கம் மாநில கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து சைக்கிள் பேரணி மேற்கொண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை குழுவினர் இன்று இரவு சென்னை வந்து அடைகின்றனர் அவர்களுக்கு நாளை சென்னை மெரினா கடற்கரையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டு மாலை 5.30 மணிக்கு மெரினா கடற்கரையில் கடற்கரை பாதுகாப்பு குறித்து மீனவர்களுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மத்திய தொழில் பாதுகாப்பு பணியாளர் நடத்த உள்ளனர்
இதுகுறித்து சென்னை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை டிஐஜி, அருண் சிங் மற்றும் சிவகுமார் ஆகிய இருவரும் கூட்டாக மீனம்பாக்கம் மத்திய தொழில் பாதுகாப்பு படை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது சென்னை விமானநிலை மத்திய தொழில் பாதுகாப்பு படை டிஐஜி அருண் சிங்,
கடற்கரை பாதுகாப்பே இந்தியாவின் வளம் என்பதால் இந்த விழிப்புணர்வு சைக்கில் பேரணி நடத்தபடுகிறது, இன்று மேற்கு வங்கத்திலிருந்து சென்னை வர உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை குழுவினருக்கு நாளை வரவேற்பளிக்க உள்ளதோடு மெரினா கடற்கரையில் பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய மிக பெரிய நிகழ்ச்சி நடக்க உள்ளது,
அதில் மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்,அதேபொல் ஏற்படுத்தி வருகின்றனர்,சைக்கிள் பேரணியில் வருபவர்கள் வழியில் உள்ள மீனவர்கள் மற்றும் உள்ளுர் வாசிகளை சந்தித்து கடற்கரை வளம், சமூக விரோதிகள் ஊடுரவலை எப்படி தடுப்பது, எவ்வாறு பாதுகாப்புடன் இருப்பது, சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு பணிகள் போன்றவை குறித்து எடுத்துறைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்,இதனால் அந்தந்த பகுதிகளில் விருப்பமுள்ளவர்கள் சைக்கிள் பேரணியில் வருபவர்களோடு உடன் கலந்து கொண்டு அவர்களை ஊக்கபடுத்த வேண்டும் இவ்வாறு கூறினார்,
சென்னை விமான நிலையத்தில் மட்டும் கடந்த ஆண்டில் விமானத்தில் சட்டவிரோதமாக எடுத்து செல்லப்பட்ட துப்பாக்கி தோட்டா பறிமுதல் தொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்துள்ளோம், மேலும் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பாற்ற முறையில் தவற விட்டுச் சென்ற 5 கோடி மதிப்புள்ள பொருட்களை மீட்டு உள்ளோம்,2 கோடி 56 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்துள்ளோம், மேலும் ஒன்பது கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்துள்ளோம்,
மேலும் தேசிய அளவில் சுமார் 10,000 கோடி மதிப்புள்ள பொருட்களை சிஐஎஃப் மற்றும் தீயணைப்புதுறை, பாதுகாப்பு துறை அதிகாரிகள் இணைந்து பாதுகாத்து உள்ளது விமான நிலையங்கள் தவிர இந்தியா முழுக்க உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் மத்திய தொழில்படை பாதுகாப்பு உள்ளது குறிப்பாக பெண்களுக்கான பாதுகாப்பு முக்கிய அம்சமாக உள்ளஉள்ளது,
மேலும் நாடு முழுவதும் 400 பெண்கள் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் போது அவர்களுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி செய்துள்ளது மேலும் தவறவிட்ட மற்றும் தொலைந்த 200 குழந்தைகளை பெற்றோர்களிடம் பாதுகாப்பாக ஒப்படைத்து உள்ளோம், இதேபோன்று கடலில் சிக்கிக்கொள்ளும் சிலரையும் மீட்டு உள்ளோம் இவ்வாறு கூறினார்,
இதையடுத்து டிஐஜி சிவக்குமார் கூறுகையில்,
மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் தமிழ்நாட்டை அடைந்தவுடன் ஆறு நாட்கள் தமிழ்நாட்டில் பயணம் மேற்கொள்வார்கள், வரும் 26 ஆம் தேதி புதுச்சேரி கடற்கரை பகுதியில் அவர்களை வரவேற்று அங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்,28 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் அதிராமபட்டினம் பகுதியில் பிரபல யு டியூபர் வில்லேஜ் குக்கிங் சேனலைச் சேர்ந்தவர்கள் பேரணியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்,
மீனவ கிராம மக்களுக்கு தொடர்ந்து விழுப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் சந்தேகத்திற்குரிய நபர்கள் நடமாட்டம் கடற்கரைப் பகுதியில் வேறு ஏதாவது பதட்டம் ஏற்பட்டால் உடனடியாக தகவல் அளிக்கும் வகையில் அவர்களுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டு வருகிறது, இந்த பேரணி மூலம் மீனவர்கள் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுடன் நண்பர்களாக இருப்பார்கள்,