• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு பேரணி..,

ByG.Suresh

Apr 28, 2025

சிவகங்கையில் பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் வாடிக்கையாளர் விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவன தொலைபேசி நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை துணை பொது மேலாளர் பினு தொடக்கி வைத்தார். ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில், திருப்பத்தூர் சாலை, பழைய நீதிமன்றம், காந்தி வீதி வழியாக பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

துணை பொதுமேலாளர்(இணையம்) ஜெயராஜ், கள மேலாளர் ஜெய் கார்த்திக் ஆகியோர் பேரணியில் நோக்கம் பற்றியும், துணை பொது மேலாளர் ராமநாதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பல்வேறு சேவை பற்றியும் விளக்கிப் பேசினர். மேலாளர் சுப்பிரமணியம்பிள்ளை நன்றி கூறினார். இதில், இணைய சேவை முகவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.