மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி சார்பில் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட வலியுறுத்தி நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் மஸ்தூர் பணியாளர்கள் கொட்டும் சாரல் மழையில் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.,

உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணியைமண்டலம் நகராட்சியின் மண்டல இயக்குனர் முருகேசன், நகராட்சி ஆணையாளர் இளவரசு, நகர் மன்ற துணை தலைவர் தேன்மொழி மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் இணைந்து கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.,
தேனி ரோடு, உசிலம்பட்டி பேருந்து நிலையம் வழியாக உசிலம்பட்டி தேவர் சிலை வரை விழிப்புணர்வு பதாதைகளை ஏந்திய வண்ணம் கொட்டும் சாரல் மழையில் ஊர்வலமாக சென்று நிறைவு செய்தனர், இந்த பேரணியின் முடிவில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும், மஞ்சள் பை பயன்படுத்த வலியுறுத்தி உறுதிமொழி ஏற்று பொதுமக்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.,




