• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி..,

BySeenu

Feb 8, 2026

கோவையில் போதை பொருட்களுக்கு எதிராக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு இருசக்கர வாகனம் ஓட்டி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

போதை மற்றும் புகையிலைக்கு எதிராக அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதனைத் தடுக்கும் விதமாக கோவை மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை மற்றும் மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு சார்பாக போதைக்கு எதிரான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கோவை ரேஸ் கோர்ஸ் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் பேரணியில் சுமார் 270-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இப்பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கொடியசைத்து துவங்கி வைத்து அவரும் பேரணியில் கலந்து கொண்டு இருசக்கர வாகனம் ஓட்டி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் பலூன்களில் போதை விழிப்புணர்வு குறித்தாக வாசகம் இடம் பெற்று இருந்தது. கள்ளச்சாரம் குடிப்பதனால் பல்வேறு தீங்குகள் உண்டாகும் என பதாகைகளை ஏந்தி இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு மேற்கொண்டனர்.

இந்த பேரணியானது ரேஸ்கோர்ஸ் முழுவதும் சுற்றி மீண்டும் சுகாதாரத்துறை அலுவலகத்தில் நிறைவடைந்தது.