• Sat. Sep 26th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

காரைக்குடி ஸ்ரீவித்யாகிரி கல்லூரியில் பாராளுமன்ற நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

ByG.Suresh

Mar 1, 2024

இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் நேரு யுவகேந்திரா சார்பில் பாராளுமன்ற நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி. காரைக்குடி ஸ்ரீவித்யாகிரி கல்லூரியில் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயல் ஸ்ரீவித்யாகிரி தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பாராளுமன்ற நடைமுறைகள் குறித்த விளக்க நிகழ்ச்சிகள் இன்று நிகழ்த்தி காட்டப்பட்டது. பாராளுமன்றம் போல் வடிவமைக்கப்பட்ட அரங்கத்தில் அமைக்கப்பட்ட இருக்கைகளில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போல் மாணவ,மாணவிகள் பொதுமக்கள் அமர வைக்கப்பட்டு, அவை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டது.
ஆளும் கட்சி அமைச்சர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போல் இருக்கைகள் வரிசைப்படுத்தி, அதில் மாணவ, மாணவிகள் அமர வைக்கப்பட்டனர்.
பின்பு, பேரவை தொடங்கி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளை, ஆளும் கட்சி அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என நடைமுறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், வாக்கு எந்திரம் எப்படி செயல்படுதப்படுகிறது? வாக்காளர்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தி காண்பிக்கப்பட்டது.
இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், சிவகங்கை நேரு யுகேந்திரா மற்றும், ஸ்ரீ வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ,மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர