கன்னியாகுமரியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற பாதுகாப்பு மற்றும் கட்டாயம்
தலைகவசம் அணிவோம் விழிப்புணர்வு ஊர்வலம் உறுதிமொழி கையெழுத்து.
கன்னியாகுமரி ஜீரோ பாயிண்ட் பகுதியில் போக்குவரத்து காவலர்கள் சார்பில்,
சாலை பாதுகாப்பு மற்றும் கட்டாயம் தலைகவசம் அணிவோம் என்ற உறுதிமொழியை, இருசக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் எடுத்துக்கொண்டது கொள்ள வேண்டும். வாகனம் ஓட்டும் உரிமம் இல்லாது வாகனம் ஓட்டக்கூடது என்ற உணர்வை பொதுமக்களுக்கு இன்றைய இளைய சமுகம் முன் மாதிரியாக இருக்க வேண்டும் என பேச்சில் குறிப்பிட்டார் கன்னியாகுமரி துணை காவல் துறை கண்காணிப்பாளர் மகேஷ் குமார்.


விழிப்புணர்வு ஊர்வலம் தொடங்குவதற்கு முன்.நான் எப்போதும் சாலை விதிகளை கடைபிடிப்பேன் என உறுதி எடுத்து பொதுப்பலகையில் நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் கையெழுத்து இட்டார்கள்.


கன்னியாகுமரி ஜீரோ பாயிண்டில் இருந்து காந்தி நினைவு மண்டபம் வரை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வல, நிகழ்வை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் சப்.இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒழுங்கு படுத்தினார்கள்.

