• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தேனியில் குழந்தை திருமணங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

தேனி பங்களாமேடு அருகே சமூக நலன், மகளிர் உரிமை துறை, தமிழ் மாநில பெண்கள் இயக்கம், ஆரோக்கிய அகம் சார்பில் இன்று (டிச.24) காலை 9.15 மணிக்கு துவங்கிய குழந்தை திருமணங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை, கலெக்டர் முரளீதரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.


இந்த ஊர்வலம் தேனி பழைய பஸ் ஸ்டாண்டை கடந்து பெரியகுளம் ரோடு வழியாக சென்று அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி முன்பு நிறைவடைந்தது. இதற்கிடையில் ஊர்வலத்தில் சென்ற பெண்கள் வழிநெடுக ஆங்காங்கே பொதுமக்களிடம் குழந்தை திருமண தடை சட்டம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். மேலும் அவர்களிடம் சட்டத்திற்கு புறம்பாக குழந்தை திருமணங்கள் நடந்தால், உடனடியாக 1098 என்ற எண் மூலம் சைல்டு லைன் அமைப்பிற்கு தொடர்பு கொள்ளலாம்.

இதுதவிர மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடமும் புகார் தெரிவிக்கலாம். புகார்தாரரின் விபரம் ரகசியம் காக்கப்படும் என, எடுத்துரைத்தனர்.


முன்னதாக, ஊர்வலத்தை துவக்கி வைத்த கையோடு, அவ்வழியே வந்த சில அரசு பஸ்களை நிறுத்தி குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பயணிகளிடம், கலெக்டர் வழங்கினார்.