திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோயிலில் இன்று 150 க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவில் உள்ளது சிக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாளான இன்று கோவிலில் பதிவு பெற்ற 66 திருமணங்களும் மற்றும் மண்டபம் மற்றும் இதர இடங்களில் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோயில் இன்று 15க்கு மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்ற நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த திருப்பரங்குன்றம் கோவில் காவல் நிலைய தலைமை காவலர் பிரேம்குமார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டியிருந்தார்.
அப்போது அங்கு வந்த மணமக்களை இன்று போல் என்றும் சந்தோசமுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து அரவணைத்து செல்ல வேண்டும் பெற்றோரை இருவரும் பாதுகாக்க வேண்டும் உங்களுக்கு காவல்துறை சார்பாக வாழ்த்துக்கள் எனக் கூறி தலைமை காவலர் பிரேம்குமார் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.