மதுரை காளவாசல் பகுதியில் திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி தலைமையில் அண்ணா பல்கலைகழக மாணவர்கள்,பேராசிரியர்கள் இணைந்து பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் துண்டு பிரசுரம் வழங்கியும், போக்குவரத்து விழிப்புணர்வு பாதாகைகளுடன் சாலைப்பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்..

இதில் அண்ணா பல்கலை கழக பேராசிரியர் முத்துவேலாயுதம் மற்றும் சார்பு ஆய்வாளர் சந்தனகுமார் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.. வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகள் மற்றும் சாலை பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது குறித்து விழிப்புணர் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்





