ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அன்று அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜகவினர் தேசிய கொடியை ஏந்தி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் சுற்றுலா மலை மீது பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் மலையை குடைந்து கட்டப்பட்ட வெட்டுவான் கோயில் அருகே பாஜக மாவட்ட தலைவர் வெங்கடேசன்சென்னகேசவன் தலைமையில் பாஜகவினர் கையில் தேசிய கொடியை ஏந்தி ஜெய்ஹிந்த்! வந்தேமாதரம்! என கோஷமிட்டனர். இதில் பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணை தலைவர் இராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் திணேஷ்ரோடி, மாவட்ட இளைஞரணி பொருளாளர் பொன்ராஜ், கயத்தார் மேற்கு ஒன்றிய தலைவர் ஜெகதீஷ், ஒன்றிய பொது செயலாளர் சதீஷ்குமார், ஒன்றிய துணை தலைவர்கள் மதிஇராஜசேகரன், முத்துராமலிங்கம், மாவட்ட நெசவாளர் பிரிவு செயலாளர் மாரியப்பன், கூட்டுறவு பிரிவு ஒன்றிய தலைவர் மாடசாமி, தகவல் பிரிவு விஜயபழனி, சிறுபான்மை அணி பிரான்சிஸ், விஸ்வநாகராஜன் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், கட்சியினர் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.