• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு..,

ByM.S.karthik

Jul 23, 2025

மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் நிலையத்துக்கு உட்பட்ட தமிழ் சங்கம் ரோட்டில் அமைந்துள்ள செந்தமிழ் கலைக்கல்லூரியில் போக்குவரத்து மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி வழங்கினார்.

இதில் இளைஞர்கள் எவ்வாறு சாலை விதிகளை பின்பற்றி வர வேண்டும் என்பது பற்றியும்,விபத்தினை தவிர்த்திட மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் பற்றியும் விழிப்புணர்வு வழங்கினார். தொடர்ந்து மாணவிகளிடையே பேசுகையில் பெண்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் நிகழ்ந்து வரும் செல்போன் மூலமாக சைபர் கிரைம் குற்றங்கள் பற்றியும் அதிலிருந்து பெண்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது பற்றிய விழிப்புணர்வுகளும் சமூகத்தில் எவ்வாறு தன்னம்பிக்கையுடன் சவால்களை எதிர்கொள்ளுதல் பற்றிய அறிவுரைகளையும் வழங்கினார்.

இதில் கல்லூரியின் முதல்வர் தேவி திலகர் திடல் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் பாண்டியராஜன் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.