மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் கிராம தங்கல் பயிற்சியில் ஈடுபட்டு வரும் தேனி குள்ளப்புரம் வேளாண் கல்லூரி மாணவர்கள், விவசாயிகளுக்கு இயற்கை முறையில் விவசாயம் செய்வது குறித்து விழிப்புணர்வு மற்றும் இயற்கை விவசாயத்தில் பயிர்களை பாதுகாப்பது குறித்து செய்முறை விளக்கங்களை அளித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இன்று உசிலம்பட்டி அருகே வளையபட்டி கிராமத்தில் குரும்பன் என்ற விவசாயியின் தோட்டத்தில் பயிர்களின் வேர் வளர்ச்சி, நுண்ணுயிர் வளர்ச்சி மற்றும் மண்ணின் பதபதப்பு தன்மையை அதிகரிப்பது குறித்து விழிப்புணர்வு வழங்கினர்.
இதில் இயற்கை முறையில் மாட்டு சாணம், கடுக்காய், அதிமதுரம், வெல்லம் கொண்டு தயாரிக்கப்படும் ஆர்க்கீ பாக்டீரியா எனும் கரைசல் குறித்தும், அதை எவ்வாறு தயாரிக்க வேண்டும், எவ்வாறு பயிர்களுக்கு தெளிக்க வேண்டும் உள்ளிட்ட செய்முறை விளக்கத்தையும் அளித்தனர்.
விவசாயிகளும் இந்த பயிர்களின் வேர் வளர்ச்சி, நுண்ணுயிர் வளர்ச்சிக்கான கரைசல் மூலம் பயிர்களை பாதுகாப்பதுடன் மண்ணையும் பாதுகாக்க முடியும் என மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.




