சிவகங்கையில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கத்தின் சார்பில், நடத்திய மகளிர் தின விழாவில் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற வீரபெண்களுக்கு விருது வழங்கப்பட்டது.
சிவகங்கையில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்தின் சார்பில் மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக வீரமங்கை ராணி வேலுநாச்சியார் விருது வழங்கும் விழா இன்று மாலை நடைபெற்றது.
சிவகங்கை ராணி மதுராந்தகி நாச்சியார் தலைமையில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்க தலைவர் ஒண்டிராஜ் முன்னிலையில் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளை வளர்த்து களம் இறங்கிய வீரப் பெண்களை தமிழகம் முழுவதும் இருந்து 41 பேர் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தனர்.


தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க கௌரவத்தலைவரும், இலங்கை ஆளுநர், முன்னாள் மாகான முதலமைச்சர் செந்தில் தொண்டமான் விருதுகளை வழங்கினார். சிவகங்கை ராணி மதுராந்தக நாச்சியார் பதக்கங்களை அணிவித்து பாராட்டினார். இந்த நிகழ்ச்சி பெண்கள் அனைத்து துறைகளிலும் கால் பதித்து சாதித்து வரும் நிலையில், ஜல்லிக்கட்டிலும் வீரத்தை பறைசாற்றும் விதமாக தமிழகம் முழுவதும் பங்கேற்று சாதித்த பெண்களை தேர்வு செய்து விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.
