• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அவனியாபுரம் ஸ்ரீ மகாகாளி அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

ByKalamegam Viswanathan

Feb 16, 2024

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் அய்வேத்தனேந்தல் கிராமம் தவராம்பு கிராமம் சின்ன உடைப்பு கிராமம் காவல்காரர்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ மகாகாளியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன 2ம் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை மங்கல வாத்யம் விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமம் உள்ளிட்ட யாக சாலை பூஜைகளுடன் துவங்கியது.

சர்வ சாதகம் அமுதன்சிவம் சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சியில் தலைவர் செல்லம் செயலாளர் சார்லஸ் பொருளாளர் செல்லம் துணை பொருளாளர் சின்னராசு கணக்குப்பிள்ளை ஜோதி மற்றும் கிராம நிர்வாகிகள் பொதுமக்கள் ஆகியோர் முன்னிலையில் வானில் கருடன் வட்டமிட யாகசாலையிலிருந்து எடுத்துவரப்பட்ட புனித நீரானது கோபுர கலசத்திற்கு ஊற்றப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீ மகாகாளியம்மனுக்கு பால் பன்னீர் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான திரவிய வாசனை பொருட்களுடன் அபிஷேக ஆராதனையும் தீபாரதனையும் நடைபெற்றது.

தொடர்ந்து மகா காளியம்மன் கோவில் நிர்வாக கமிட்டி சார்பாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் விழா கமிட்டியினர்சிறப்பாக செய்திருந்தனர்.