
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் 3 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 2022 நவம்பர் மாதம் 11ஆம் தேதி ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்திற்கு பூமி பூஜை போடப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்தை நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைக்க உள்ளார்.
இந்த நிலையில் நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைக்கப்பட உள்ள திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தின் பணிகள் 90% முடிவடைந்து விட்டதால் ஒன்றிய அலுவலகத்தை சுற்றி பிளவர் பிளாக் அமைக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து பணிகளும் இன்று மாலைக்குள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து நாளை காணொளி வாயிலாக தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ள நிலையில் தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா சட்டமன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர் வேட்டையன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இந்திரா ஜெயக்குமார் மற்றும் அனைத்து கட்சி மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

