கோவையில் தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் பேட்டி..!
கோவை அரசு மருத்துவமனையில் தினம் தோறும் இருதய அறுவை சிகிச்சை செய்வதற்கு தேவையான வசதிகளை செய்ய பரிந்துரை செய்துள்ளோம் என தமிழ்நாடு சட்டபேரவை மதிப்பீட்டு குழு தலைவர் பேட்டி அளித்துள்ளார்.தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டு குழுவினர் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்…
மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் – வானதி சீனிவாசன் வலியுறுத்தல்.
கோவை தெற்கு தொகுதி நெசவாளர் காலனியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சட்டமன்ற தொகுதி நிதியில் கட்டப்பட்ட மைதானத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதனை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் திறந்து வைத்தார். பின்னர் இறகு பந்து விளையாடினார். இதனை தொடர்ந்து…
கோவை, செல்வபுரம் பகுதியில் பண மோசடி செய்த நபரிடம், பணத்தை மீட்டு தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது
சிங்கப்பூர் தொழில் அதிபரிடம் இழந்த பணத்தை வாங்கி தருவதாக நாடகமாடி, கோவை அலுமினிய வியாபாரியிடம் 13 லட்சம் ரூபாய் மோசடி செய்த அ.ம.மு.க பிரமுகரை, கோவை செல்வபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி.…
உலக ஆயுர்வேத விழாவில் பரிசுகளை வென்ற ஈஷா சமஸ்கிருதி மாணவர்கள்
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற உலக ஆயுர்வேத விழாவில் கலந்து கொண்ட ஈஷா சம்ஸ்கிருதி முன்னாள் மாணவர்கள் சிறந்த படைப்பிற்கான விருதுகள் மற்றும் பரிசுகளை வென்றனர். இந்திய மருத்துவ ஞானத்தை கொண்டாடும் வகையில் திருவனந்தபுரத்தில் டிச 1 முதல் 5 வரை…
மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி சிறுகுறு தொழில் நிறுவனங்களின் 8ம் கட்டம் போராட்டமாக மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு
கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள COWMA அலுவலகத்தில்தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ், மற்றும் அமைப்பை சேர்ந்த ஜெயபால் பேசுகையில் சிறுகுறு தொழில் நிறுவனங்களின் மூலப் பொருட்களின் விலை…
கோவை புறநகரில் 500 சிசிடிவி கேமராக்களை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை திறப்பு – மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி
ஊருக்கு வெளியே வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மூத்த குடி மக்களின் அலை பேசிகளில் காவல் துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள் ஸ்பீட் டயலில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெருமளவு குற்றங்கள் குறைந்துள்ளதாக மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் சூலூர்…
ஆலாந்துறை பள்ளியில் ஓவிய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம்- DYFI, SFI உட்பட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கோவை ஆலாந்துறை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளியில் ராஜ்குமார் என்பவர் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு அவர் அப்பள்ளியில் தேசிய கீதம் பாதியில் நிறுத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அப்பள்ளியில்…
அதிமுக கட்சி கொடியை நாங்கள் பயன்படுத்துவோம் -ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி பேட்டி
நீதிமன்றம் அதிமுக கட்சி கொடியையோ, சின்னதையோ பயன்படுத்தக்கூடாது என ஓ பன்னீர்செல்வத்திற்கு மட்டுமே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், அவரை தவிர்த்து நாங்கள் எல்லாம் கட்சி கொடியுடன் தான் பயணம் செய்வோம். கட்சி சின்னத்தை தான் பயன்படுத்துவோம்; எவன் சொன்னாலும் கேட்க மாட்டோம் என…
கோயம்புத்தூரில் டபுள் டக்கர் பஸ் அறிமுகம் துவக்கி வைத்த கலெக்டர்,போலீஸ் கமிஷனர்
டபுள் டக்கர் பேருந்து என்றாலே சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதில் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் நிச்சயம் இருக்கும்.இந்த டபுள் டக்கர் பஸ்சானது இந்தியாவில் 1920-ம் ஆண்டு கொல்கத்தா நகரில் முதலில் இயக்கப்பட்டது.அப்போது பிரிட்டிஷ் அரசு இதனை இயக்கி…
பெரியாரின் 50ம் ஆண்டு நினைவு தினம்- கோவையில் பல்வேறு கட்சியினர் அஞ்சலி
தந்தை பெரியாரின் 50ம் ஆண்டு தினத்தை முன்னிட்டு பெரியாரின் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தந்தை பெரியாரின் 50ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் பெரியாரிய உணர்வாளர்கள்,…