திருவிழாவை ஏன் நிறுத்துனீங்க? வாக்காளர் அட்டையை வாங்கிக்கோங்க
வடமதுரை அருகே கோயில் திருவிழாவை தடுத்து நிறுத்திய திமுக கட்சியினரை கண்டித்து நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக ஊர் பொதுமக்கள் வீடுகள் கடைகள் முன்பு கருப்பு கொடியை கட்டியும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டும் நடவடிக்கை எடுக்காவிட்டால் வாக்காளர் அட்டையை அதிகாரிகளிடம் ஒப்படைப்போம்…
கேரளத்தில் அட்டிங்கல் தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் வீ.முரளிதரனுக்கு டெபாசிட் தொகை கட்டிய மாணவர்கள்.
2022 ஆம் வருடம் போரில் ஈடுபட்ட உக்ரைன் நாட்டிலிருந்து பாதுகாப்பாக பாரதம் அழைத்து வரப்பட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து தங்கள் நன்றியினை தெரிவிக்கும் விதமாக வீ.முரளிதரனுக்கு டெப்பாசிட் தொகையை காட்டியுள்ளனர்.
தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 அரசு ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு
சென்னையில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளில் 19,400 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலானோர் மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் அமித்ஷா இரண்டு நாட்கள் தேர்தல் பிரசாரம்
தமிழகத்தில், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித்ஷா இரண்டு நாட்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.ஏப்.,19ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தலைவர்கள் மாநிலம் முழுவதும்…
பாஜக நிர்வாகி காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட பணம், பிரதமர் மோடி படம் போட்ட கவர்கள் பறிமுதல்
திருச்சி லால்குடி அருகே திண்டுக்கல் மாவட்ட பாஜகவின் SC பிரிவு தலைவர் ஜெகநாதனின் காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.75,860 பணம் மற்றும் பிரதமர் படம் அச்சடிக்கப்பட்ட கவர்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
இன்று கூடுகிறது டெல்லி சட்டப்பேரவை
சுகாதார பிரச்னைகள் தொடர்பாக விவாதம் நடத்துவதற்காக டெல்லி சட்டப்பேரவையில் இன்று சிறப்பு கூட்டத்தொடர் கூடுகிறது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் முதலமைச்சர் இல்லாமல் கூட்டத்தொடர் கூடுகிறது.
டீக்கடையிலும் பிரச்சாரம்
திண்டுக்கல் மாவட்டம், பஞ்சம்பட்டி பகுதியில் பிரச்சாரம் செய்த அமைச்சர் பெரியசாமி தெருவோர தேநீர் கடையில் சிபிஐ வேட்பாளர் உடன் அமர்ந்து வடை டீ சாப்பிட்டுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
திறன்மிக்க வாக்காளராகுங்கள்
தலைமைத் தேர்தல் அதிகாரி / அரசு முதன்மை செயலாளர் சத்யபிரத சாகு, இ.ஆப., மக்களவை பொதுத்தேர்தல் 2024 நடைபெறவுள்ளதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “திறன் மிக்க வாக்காளராகுங்கள்” – வாக்காளர் கையேட்டினை வெளியிட்டார்.