ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி – அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா இன்று மோதல்
ஐசிசி சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதுகிறது. எட்டு அணிகள் பங்கேற்றுள்ள 9-வது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றிருந்த அணிகள்…
மும்மொழிக் கல்வி மூலம் குலக்கல்வி – மத்திய அரசு மீது அப்பாவு குற்றச்சாட்டு
மும்மொழிக் கல்வி மூலம் குலக்கல்வியை கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்கிறது என்று தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மும்மொழிக் கல்வி மூலம் குலக்கல்வியை கொண்டுவர மத்திய அரசு முயற்சி…
அபுதாபியில் 4 மாதக் குழந்தை கொலை- இந்திய பெண்ணுக்கு மரணதண்டனை
அபுதாபியில் நான்கு மாதக் குழந்தையைக் கொலை செய்ததாக இந்திய பெண்ணுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. உத்தப்பிரதேச மாநிலம், பண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாகிதி கான்(33). இவர் கடந்த 2021 டிசம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் ஒரு வீட்டில் குழந்தை…
தமிழக முதல்வரின் தாய் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள். இவர் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். இவருக்கு நேற்று இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால்…
நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை- திமுக அரசு பொறுப்பேற்க ஈபிஎஸ் வலியுறுத்தல்
திண்டிவனம் அருகே நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவி தற்கொலைக்கு செய்து கொண்டதற்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மாணவியின் மரணத்திற்கு திமுக அரசுதான் முழுப்பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சித்…
‘புளூ கோஸ்ட்’ விண்கலம் நிலவில் தரையிறங்கி சாதனை!
அமெரிக்காவின் ‘புளூ கோஸ்ட்’ விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. பூமியின் துணைக்கோளான நிலவை பல்வேறு நாடுகள் ஆய்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கான நிலவைச் சுற்றி வந்து ஆய்வு செய்வதற்க விண்கலங்களை அந்த நாடுகள் அனுப்பி வருகின்றன. இதில்…
குளித்தால் நோய் வருமா? – கங்கை நதி குறித்து பீகாரின் அதிர்ச்சி அறிக்கை!
பீகாரில் பெரும்பாலான இடங்களில் கங்கை நீர் குளிப்பதற்கு உகந்ததாக இல்லை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநில சட்டப்பேரவையில் சமீபத்தில் 2024-2025 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பீகாரில் உள்ள கங்கை நதி நீரின் தரம்…
தென் தமிழக அரசு பேருந்துகள் தாம்பரம் போகாது- கிளாம்பாக்கம் தான் போகணும்!
தென்தமிழகத்தில் இருந்து வரும் பேருந்துகள் நாளை (மார்ச் 4) முதல் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு அனைத்து பேருந்துகளும் மாற்றி இயக்கப்பட்ட நிலையில், சில போக்குவரத்துக் கழக பேருந்துகள் தாம்பரம்…
சென்னையில் இன்று முதல் 4 புதிய மின்சார ரயில்கள் அறிமுகம்!
சென்னை பயணிகள் வசதிக்காக சென்ட்ரல்- ஆவடி உள்பட 4 புதிய மின்சார ரயில் சேவைகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. சென்னை ரயில்வே கோட்டத்தில், சென்னை கடற்கரை – தாம்பரம், சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, கடற்கரை –…
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இரவில் தூக்கம் வருவதில்லை- சீமான் கிண்டல்
என் பெயரைக் கேட்டாலே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இரவில் தூக்கம் கூட வருவதில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். கேரளாவிற்கு தமிழகத்தில் இருந்து கனிமவளங்கள் கொண்டு செல்வதைக் கண்டித்து தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் நாம் தமிழர் கட்சி…












