• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஆகஸ்ட் 25 மும்பையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக்கூட்டம்..!

Byவிஷா

Jul 28, 2023

மும்பையில் வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி காங்கிரஸ் சார்பில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
பாஜக.வுக்கு எதிராக நாடாளுமன்றத் தேர்தலில் பலமான கூட்டணி அமைக்கக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. பீகார் தலைநகர் பாட்னாவில் இதற்கான முதல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பிறகு 2-வது முறையாகப் பெங்களூருவில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் எதிர்க்கட்சிகள் கூடி மீண்டும் ஆலோசனை நடத்தின.
பெங்களூருவில் 26 கட்சிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் அணிக்கு ‘இந்தியா’ எனப் பெயரிடப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தித் தேர்தல் வியூகங்கள் உள்ளிட்டவற்றை வகுப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 25 மற்றும் 26-ந்தேதிகளில் மும்பையில் நடைபெறும் என தகவல் வெளியாகி இருக்கிறது மும்பையில் காங்கிரஸ் உதவியுடன் நடைபெறும் இந்த கூட்டத்தை உத்தவ் தாக்கரேயின் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஒருங்கிணைக்கும் என்றும் எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. ‘இந்தியா’ கூட்டணியில் இல்லாத ஒரு கட்சி ஆளும் மாநிலத்தில் முதல் முறையாக எதிர்க்கட்சிகள் ஒன்று கூடுவது குறிப்பிடத்தக்கது.