• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ – அமைச்சர் பி.டிஆர் விளக்கம்

ByA.Tamilselvan

Apr 23, 2023

அமைச்சர் உதயநிதியும், சபரீசன் குறித்துஅண்ணாமலை வெளியிட்ட ஆடியோ போலியானது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதியும், சபரீசனும் ஒரே ஆண்டில் தங்களது மூதாதையரைவிட அதிகமாக சம்பாதித்துள்ளனர். அது பிரச்சினையாகி வருகிறது. அதனை எப்படி கையாளுவது? எப்படி சிக்கிக்கொள்ளாமல் இருப்பது? ரூ.10 கோடி, ரூ.20 கோடி என்று அவர்கள் சிறுக சிறுக குவித்தது தோராயமாக ரூ.30 ஆயிரம் கோடி இருக்கும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒருவருடன் ஆங்கிலத்தில் உரையாடும் ஆடியோவை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் …சமூக வலைதளத்தில் என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் அளிப்பதில்லை. நான் அமைச்சரவையில் ஒதுக்கப்பட்டுள்ள இலாகாவில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன். எனது பொது வாழ்வில் நான் செய்த அனைத்து விசயங்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின்பேரில் மட்டுமே அமைந்துள்ளன. எங்களை பிரிப்பதற்காக எந்த ஒரு நாசவேலையை செய்தாலும் வெற்றி பெறாது. அந்த ஆடியோ முழுக்க முழுக்க போலியானது. அதற்கு தொழில்நுட்ப ரீதியாக என்னிடம் ஆதாரம் உள்ளது. 26 நொடிகள் ஓடும் அந்த ஆடியோவில் முதல் சில விநாடிகள் வேறொரு கிளிப்பில் இருந்து எடுக்கப்பட்டது. எஞ்சிய உரையாடலில் குரல் தெளிவாக இல்லை. வேண்டும் என்றே சப்தம் குறைக்கப்பட்டுள்ளது. அதுவும் தவிர இந்த தொலைபேசி அழைப்பில் பின்னணி சத்தம் எதுவும் இடம்பெறவில்லை. எனவே நான் பேசியதாக வெளியான ஆடியோ போலியானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.