தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்ற 10 வயது சிறுவன் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று விட்டு மாலை ஆறு மணி அளவில் ஊருக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் உபாதைகளை கழிக்க சென்றுள்ளார்.

அப்பொழுது அவ்வழியாக ஆட்டோவில் மாஸ்க் அணிந்து வந்த மூன்று நபர்கள் சிறுவன் முத்துப்பாண்டியை தூக்கி ஆட்டோவில் ஏற்றி அவருக்கு மயக்க ஊசி செலுத்த முயற்சி செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து சிறுவன் தப்பியுள்ளாார். அப்போது அவர்கள் வைத்திருந்த கத்தியால் சிறுவனின் சட்டையை கிழித்ததாகவும் அதில் கையில் லேசான காயம் ஏற்பட்டதாகவும் சிறுவன் தெரிவிக்கின்றார்.

இந்த தகவல் அறிந்த பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் கடத்த முயற்சி செய்த சிறுவனிடமும், அப்பகுதி மக்களிடமும் விசாரணை மேற்கொண்டு சிறுவனை கடத்த முயற்சி செய்த மர்ம நபர்கள் யார் என தேடி வருகின்றனர்.