கருங்கண்ணி ஊராட்சியில் 26 பேருக்கு பட்டா வழங்கவில்லை என ஆட்சியரிடம் மனு கொடுத்த த.வெ.கவினர் மீது தாக்குதல் நடத்திய திமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரை கைது செய்யக்கோரி த.வெ.கவினர் சாலை மறியல் போராட்டம்; திமுகவினர் 100 க்கும் மேற்பட்டோர் திரண்டு எதிர் கோஷமிட்டதால் பரப்பரப்பு; தவெகவினரை போலிசார் அடித்து போலிஸ் வாகனத்தில் ஏற்றியதால் பதற்றம்; காவல் வாகனத்ததை முற்றுகையிட்ட 500 க்கும் மேற்பட்டோர் தவெகவினர் கைது
கடந்த 3 ஆம் தேதி நாகை மாவட்டத்திற்கு வருகைதந்த தமிழக முதல்வர் அன்றைய தினம் சுமார் 39 ஆயிரம் பயனாளிகளுக்கு 200 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சென்றார். இதற்காக கருங்கண்ணி ஊராட்சியை சார்ந்த 26 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதாக கிராம நிர்வாக அலுவலரால் உறுதி செய்து பயனாளிகளிடம் கடந்த 1 ம் தேதியே தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முதல் அமைச்சர் நிகழ்ச்சி நிரல் அட்டவணையிலும் பயனாளிகளின் பெயரும் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் 2 ம் தேதி அன்று மாலை கிராம நிர்வாக அலுவலர் வந்து, 26 பயனாளிகளுக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படமாட்டாது எனவும் முதல் அமைச்சர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்தாக கூறப்படுகிறது.

எந்தவித உரிய காரணமும் இல்லாமல் ஏழை மக்களுக்கு கிடைக்க வேண்டிய இலவச வீட்டு மனை பட்டா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே 26 பயனாளிகளுக்கும் அறிவித்தபடி விரைந்து வீட்டு மனை பட்டா வழங்கிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சார்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆட்சியரிடம் த.வெ.க மாவட்டச் செயலாளர் சுகுமாறன் தலைமையில் கடந்த திங்கள் கிழமை பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த கருங்கண்ணி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் திமுகவினர் புகார் கொடுத்தவர்களின் வீடுகளில் புகுந்து பெண்களை மாணபங்கம் படுத்தி தாக்குதலில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பரமேஸ்வரி, சித்ரா, ராகிணி் உள்ளிட்ட 4 பேர் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தாக்குதல் நடத்திய திமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட திமுகவினரை கைது செய்யக் கோரி இன்று மேலப்பிடாகை கடைத்தெருவில் த.வெ.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதற்கு போட்டியாக திமுகவினர் 100 க்கும் மேற்பட்டோர் எதிர் கோஷம் போட்டதால் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

பின்னர் தவெகவினரை போலிசார் கைது செய்ய முற்பட்டதால் போலிசாருக்கும், தவெகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போலிசாரை கண்டித்து த.வெ.கவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை போலிசார் அடித்து தரதரவென இழுத்து சென்றும், குண்டுக்கட்டாக தூக்கி சென்றும் காவல் வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர்.
இதனால் காவல் வாகனத்தை மறித்து தவெகவினர் தவெக தொண்டர்கள் கையில் பிடித்திருந்த கொடி கம்மத்தால் காவல் வாகனத்தை அடித்து தவெக தொண்டர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். பெண்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், போலிசார் அராஜகத்தில் ஈடுப்படுவதாக கூறி கோஷங்களை எழுப்பினர். சிலர் போலிஸ் வாகன டயர் முன்பு படுத்து எதிர்ப்பை தெரிவித்தனர். அவர்களை போலிசார் இழுத்து குண்டுக்கட்டாக துக்கி போலிஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இதனால் நாகை , தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.