• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அதர்வா நடிக்கும் “பட்டத்து அரசன்” பாடல் வைரல்

ByA.Tamilselvan

Nov 19, 2022

2010-ஆம் ஆண்டு வெளியான ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா. தொடர்ந்து இவர் நடித்த ‘பரதேசி’, ‘இமைக்கா நொடிகள்’ போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான ‘குறுதி ஆட்டம்’, ‘டிரிக்கர்’ போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இவர் தற்போது ‘களவாணி’, ‘வாகை சூடவா’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.சற்குணம் இயக்கத்தில் ‘பட்டத்து அரசன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதிரடி, ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.