• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அதானிக் நீதிமன்றம் பிடிவாரண்ட் : பங்குச் சந்தை சரிவு

Byவிஷா

Nov 21, 2024

இந்திய தொழிலதிபர் அதானிக்கு நியூயார்க் நீதிமன்றம் பிடிவாண்டு பிறப்பித்துள்ளதன் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் சரிவைச் சந்தித்து வருகிறது.
அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு அதானி லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததாக புகார் எழுந்துள்ளது. சோலார் எனர்ஜி ஒப்பந்தத்தை பெறுவதற்காக அதானி லஞ்சம் கொடுக்கும் முயன்றதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ள நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக தற்போது இந்திய பங்கு சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
இதன் காரணமாக அதானி நிறுவனத்தில் முதலீடு செய்த நிறுவனங்களுக்கும் இழப்பு ஏற்படுகிறது. அந்த வகையில் அதானி குழுமத்தின் 7 நிறுவனங்களில் எல்ஐசி முதலீடு செய்துள்ள நிலையில் இன்று ஒரே நாளில் 12,000 கோடி ரூபாய் வரை எல்ஐசிக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. மேலும் அதானி குழுமத்திற்கு கடன் கொடுத்துள்ள ஐசிஐசிஐ, ஆக்சிஸ், இண்டஸ்இன்ட், ஐடிஎப்சி வங்கிகளின் பங்குகளும் சரிவை சந்தித்து வருகிறது.