• Mon. Oct 7th, 2024

பாடப்புத்தகங்களில் வேதங்கள், கீதையை சேர்க்க நாடாளுமன்ற குழு பரிந்துரை

ள்ளி பாடப்புத்தகங்களில் வேதங்கள், கீதை, பேசப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்றை சேர்க்க நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது.
பாடப்புத்தகங்களில் வேதங்கள், கீதை மற்றும் பேசப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்றை சேர்க்க என்சிஇஆர்டி-க்கு நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது. பள்ளிப் பாடப்புத்தகங்களில் உள்ளடக்கம் மற்றும் வடிவமைப்பில் சீர்திருத்தங்கள் என்ற தலைப்பிலான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாஜக எம்பி விவேக் தாக்கூர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு தாக்கல் செய்துள்ள அந்த பரிந்துரையில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடப்புத்தகங்களில் வேதங்கள், பகவத் கீதை மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் உள்பட நாட்டின் அனைத்து மூலைகளிலும் உள்ள பேசப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் வரலாற்றை சேர்க்க கேட்டுக் கொண்டுள்ளது. பல்வேறு துறைகளில் இருக்கும் முக்கிய பெண் ஆளுமைகள் மற்றும் அவர்களுடைய பங்களிப்பும் சேர்க்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்திருக்கும் நாடாளுமன்ற நிலைக்குழு, மத்திய அமைச்சகத்தின் கீழ் உள்ள பள்ளிக் கல்வித் துறையை என்சிஇஆர்டி உடன் ஒருங்கிணைத்து இதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *