• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரத்தில், எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்…

ByKalamegam Viswanathan

Jan 18, 2024

முன்னாள் முதலமைச்சர் அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாளை முன்னிட்டுக சோழவந்தான் அருகேருப்பட்டி பாலகிருஷ்ணாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் திருஉருவ சிலைக்கு அதிமுக சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட் புக் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை ஏற்று எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தார். ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி, ராஜேஷ், கண்ணா மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், ஒன்றிய அவை தலைவர் முனியாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் தங்கப்பாண்டி வரவேற்றார். மருத்துவர் அணி மாவட்ட துணைச் செயலாளர் டாக்டர் கருப்பையா லட்டு வழங்கி ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக நோட்புக்கு வழங்கினார். இதில் மகளிர் அணி மாவட்ட செயலாளர் வக்கீல் லட்சுமி, வக்கீல் விருகை தர்மர் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன் முன்னாள் சேர்மன் எம். கே. முருகேசன், நகர செயலாளர் முருகேசன் ஆகியோர் பேசினார்கள். கிளைச் செயலாளர் பழனியாண்டி நன்றி கூறினார். இதேபோல் மன்னாடி மங்கலம் கிராமத்தில் தெற்கு கிளை செயலாளர் ராஜபாண்டி தலைமையில் எம் ஜி ஆர் படத்திற்கு மரியாதை செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. வடக்கு பகுதியில் ராமு ஏற்பாட்டில் எம்ஜிஆர் பாடத்திற்கு மரியாதை செய்யப்பட்டது தேனூர் கிராமத்தில் கிளைச் செயலாளர் சோனைமுத்து ஏற்பாட்டில் நிர்வாகிகள் பாஸ்கரன் உள்ளிட்டோர் எம் ஜி ஆர் படத்திற்கு மரியாதை செய்தனர். ஓபிஎஸ் அணியினர் சோழவந்தான் நகர செயலாளர் ராமசாமி தலைமையில் ஒன்றிய செயலாளர் திரவியம் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தார். செந்தில்குமார் இனிப்பு வழங்கினார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜன் தலைமையில் கருப்பட்டியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் ரிஷபம் ராமநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.