விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளிஸ்வரி கல்லூரியில் மாநில அளவிலான இளைஞர் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாடு மூன்று நாட்கள் நடைபெற்றது.

கல்லூரியின் செயலாளர் செல்வராஜன் தலைமை வகித்தார், முதல்வர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குனரும் மங்கள்யான், சந்திராயன், திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியது உலக நாடுகள் மொத்த வருவாயில் 3% வரை அறிவியல் தொழில்நுட்பத்திற்கு ஒதுக்கும் நிலையில் இந்தியா 0. 9 சதவீதம் மட்டுமே ஒதுக்கிறது. இவ்வளவு குறைந்த நிதியிலும் இந்தியாவின் மங்கள்யான், சந்திராயன், உள்பட செயற்கைக்கோள் ஏவுதலில் முன்னிலையில் உள்ளது.

அரசு மட்டும் இன்றி தனியார் நிறுவனங்களும் அறிவியல் ஆராய்ச்சியில் பங்கேற்க வேண்டும். என்பதற்காக மத்திய அரசு ரூபாய் ஒரு லட்சம் கோடி ஒதுக்கி உள்ளது. விளையாட்டு துறையில் சாதிப்பது போல் அறிவில் கண்டுபிடிப்பிலும் ஆர்வமுடன் மாணவ, மாணவிகள், பங்கேற்க வேண்டும்.
இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்படும் இவர் பேசினார்.
பத்தாண்டுகளுக்கு முன்பு அறிவியல் தொழில்நுட்பத் துறையில் உலக அளவில் இந்தியா 81 வது இடத்தில் இருந்தது. தற்போது 39 இடத்திற்கு முன்னேறி உள்ளது எனவும் கூறினார்.

மேலும் மாநாட்டில் மூத்த விஞ்ஞானி டாக்டர் தில்லி பாபு, இந்தியாவின் நிலா மனிதர் என அழைக்கக்கூடிய டாக்டர் வெங்கடேஸ்வரன், மற்றும் ஏராளமான விஞ்ஞானிகள், வானவியல் நிபுணர்கள், கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு சாய்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட வானியல் அமைப்புகளின் கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.