• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சட்டமன்றத் தேர்தல் பரப்புரை..,

ByKalamegam Viswanathan

Jul 28, 2025

2026 நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக சத்யாதேவி அறிமுக கூட்டம் மதுரை திருப்பரங்குன்றம் கோவில் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் வேட்பாளர் முனைவர்.சத்யாதேவி கூறுகையில்:-

திருப்பரங்குன்றம் தொகுதியில் மாறி மாறி திமுக , அதிமுக ஆண்டு வருகிறது ஆனால் மக்களுக்கான தேவைகளை யாரும் பூர்த்தி செய்யவில்லை.

குறிப்பாக வெள்ளக்கல் பகுதியில் மாநகராட்சியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது அதனை முறையாக சுத்தம் செய்யாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்கள் பரவுகிறது.

திருப்பரங்குன்றம் பகுதியில் மல்லிகை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது விற்பனை இல்லாத நேரத்தில் வீணாகும் மல்லிகை பூவை நறுமணத் தொழிற்சாலை அமைக்கப்பட்டால் தொழில் உற்பத்தி செய்வது அதிகரிக்கும் அதற்கான முன்னெடுப்புகளை எடுப்பேன்.

திருப்பரங்குன்றம் பள்ள மாணவர்கள் செல்வதற்கு ரயில்வே மேம்பாலம் அமைக்க முன்னெடுப்பேன். கண்மாய்களில் மணல் கொள்ளை அதிகமாக நடைபெறுகிறது. அதனை தடுத்து நிறுத்துவேன்.

இதற்கு முன்பு திருப்பரங்குன்றத்தில் எம் எல் ஏ எத்தனை முறை மக்களை சந்தித்து குறைகளை கேட்டு அறிந்தார்கள் என்பது கேள்விக்குறிதான்.

மதுரையில் படிக்கும் இளைஞர்களுக்கு ஒரு இடத்தில் படிக்க வேண்டும் என்றால் மதுரை மாநகர் பகுதியில் உள்ள மாநகராட்சி படிப்பகத்திற்கு சென்று படிக்க வேண்டிய நிலை உள்ளது.

கடைக்கோடியில் இருக்கும் மக்கள் அங்கு செல்வதை சிரமம் உள்ளது. அதுக்கான மாற்று இடம் ஏற்படுத்துவோம். எங்களுடைய ஆட்சியில் கல்வி, மருத்துவம், குடிநீர், இலவசமாக தருகிறோம் என்பதை உறுதி அளித்தார்.

ஆண்கள் மது குடித்து விட்டு வேலைக்கு செல்லாத நிலை உள்ளது .பெண்கள் ஆடு மாடு வளர்ப்பதால் தான் கிராம பகுதியில் பொதுமக்களுக்கு தனி வருமான வளர்ச்சி உள்ளது. ஆடு மாடு வளர்ப்பதை அரசு வேலையாக ஆக்க வேண்டும் என்பதை நாம் தமிழர் கட்சி எப்போது ஆட்சிக்கு வரும் நடைமுறைக்கு வரும் என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் .

அது 2026 இல் கண்டிப்பாக நிறைவேறும்என திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளர் முனைவர் சத்யாதேவி கூறினார்.