• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சமூக ஆர்வலர் வசீம் அக்ரம் படுகொலை – தமிழ்நாடு முஸ்லிம் லீக் கடும் கண்டனம்

By

Sep 11, 2021 ,

சமூக ஆர்வலர் வசீம் அக்ரம் படுகொலைக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூக ஆர்வலர் வசீம் அக்ரம் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கேட்டு மிகுந்த மனவேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தில் இணைந்து, சமுதாய பணியாற்றி வந்த நண்பர் வசீம் அக்ரம், அதன் பின்னர் மனித நேய ஜனநாயக கட்சியில் இணைந்து தனது அரசியல் பணியை செய்து வந்தார்.

இதன் பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி சமுதாயத்திற்கு பல்வேறு பணிகளை சமூக ஆர்வலராக வசீம் அக்ரம் செய்து வந்த நிலையில், வாணியம்பாடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இம்தியாஸ் செயலை தடுத்து வசீம் அக்ரம் தடுத்து நிறுத்தியுள்ளார்.


இதனால் பழிவாங்கும் நடவடிக்கையால் இம்தியாஸ் எனும் கஞ்சா வியாபாரி கூலிபடை வைத்து வசீம் அக்ரமை படுகொலை செய்துள்ளது. இந்த கொலைக்கு தொடர்புடைய சில நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ள போதிலும், இதில் தொடர்புடைய மேலும் சில நபர்கள் தப்பிவிடாதப்படி கடுமையான நடவடிக்கையை காவல்துறை மேற்கொள்ள வேண்டும்.
வசீம் அக்ரம் கொலையில் தொடர்புடைய நபர்கள் மீது காவல்துறை உடனடியாக கடும் தண்டனை வழங்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

வல்ல இறைவன் தம்பி வசீம் அக்ரம் செய்த பாவங்களை மன்னித்து உயர்ந்த சுவனத்தை அளிக்க இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.