• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நத்தத்தில் தை மாத தேய்பிறை அஷ்டமி வழிபாடு

ByKalamegam Viswanathan

Feb 3, 2024

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி அம்மன் திருக்கோவிலில், தை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் தை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, நத்தம் கோவில்பட்டி  கைலாசநாதர் செண்பகவல்லி  அம்மன் திருக்கோவிலில் தனி சன்னதி கொண்ட கால பைரவருக்கு அபிஷேகம் இளநீர் சந்தனம் ஜவ்வாது மஞ்சள் தேன் போன்ற 16 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மல்லிகை, ரோஜா, முல்லை, அரளி, செம்பருத்தி, செவ்வரளி, தாமரை, கனகாம்பரம், சாமந்திப்பூ, செவ்வந்திப்பூ, தாழம்பூ, வாடாமல்லி, ஜாதிமல்லி, மலர்கள் கொண்ட வெள்ளிக் கவசத்தில் சிறப்பு அலங்காரம் ஆராதனை நடைபெற்றது. 
முன்னதாக, மூலவர் கைலாசநாதர் செண்பகவல்லி தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நெய் விளக்கேற்றி வழிபட்டனர். நத்தம் மாரியம்மன் கோவில் உண்டியல் எண்ணபட்டதில், ரூ. 2 லட்சம் காணிக்கை வந்துள்ளது. 
திண்டுக்கல் மாவட்டம், தென் தமிழகத்தில் புகழ்பெற்ற நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா வருகிற பிப்ரவரி 12-ஆம் தேதி தொடங்க உள்ளது. இதையொட்டி, கோவில் வளாகத்தில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரொக்கம் ரூ.2 லட்சத்து, 18 ஆயிரத்து, 918ம் , காணிக்கையாக கோயிலுக்கு வந்துள்ளது. .உண்டியல் திறப்பின் போது, கோவில் செயல் அலுவலர் சூரியன், ஆய்வாளர் செல்வம், திருக்கோவில் பூசாரிகள், வங்கி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக, உண்டியல் எண்ணும் பணியில் மகளிர் குழுவினர்கள் ஈடுபட்டிருந்தனர்.