• Sun. Dec 28th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடி அசத்திய திண்டுக்கல் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணியினர்

ByVasanth Siddharthan

Mar 1, 2025

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்தையும்‌ நலத்திட்டங்களையும் ரங்கோலியாக வரைந்து அசத்திய திண்டுக்கல் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணியினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கட்சியினர் அவரது பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் திண்டுக்கல் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரம்மாண்ட உருவப் படத்தினையும், நலத்திட்டங்களையும் ரங்கோலியாக வரைந்து பொதுமக்களிடம் சென்றடையும் வகையில் பார்வைக்கு வைத்தனர். மேலும் தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க தமிழ்நாட்டின் நலன்களையும், எதிர்காலத்தையும் யாருக்காகவும் எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம். தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடுவோம். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் இதுதான் ஒரே இலக்கு என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தமிழக முதல்வரின் பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடினர். இதற்கான ஏற்பாட்டினை திண்டுக்கல் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணியினர் செய்திருந்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் ராஜப்பா மற்றும் பகுதி செயலாளர்கள், கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.