• Tue. Feb 11th, 2025

முதலமைச்சர் உத்தரவின்படி, பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு உடனடியாக வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.

Byகுமார்

Mar 11, 2024

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, மதுரை மாவட்டம் கிழக்கு வட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வரும், பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை அவர்களுக்கு உடனடியாக வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் திருவிழான்பட்டி கிராமத்தில் வீடு கட்டும் பணிக்கான ஆணை வழங்கப்பட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் டாக்டர் மோனிகாராணா, இஆப.,
மாவட்ட ஊராட்சித்தலைவர் சூரியகலா அவர்கள் கலந்து கொண்டனர்.