• Thu. May 2nd, 2024

மதுரை மாவட்டம்343 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் – அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.

ByN.Ravi

Mar 11, 2024

மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட புட்டுத்தோப்பு எம்.ஏ.வி.எம்.எம் திருமண மண்டபத்தில் 343 பயனாளிகளுக்கு ரூ.21904305 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.

இந்நிகழ்வில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தெரிவிக்கையில்..,
ஒவ்வொரு சமுதாய வகுப்பிற்கும் என்னெ்ன சிறப்பான தேவை உள்ளதென கண்டறிந்து அவர்களுக்கு பயன்தரும் வகையில் திட்டங்களை தீட்டி அதற்கான பலன்களை உரியவர்களிடம் சேர்ப்பது ஒரு நல்ல அரசாங்கத்தின் அடையாளமாகும். என்னை தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கும், அவர்களில் பின்தங்கிய நிலையில் இருக்கும் நபர்களை அடையாளம் கண்டறிந்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதனை முக்கிய பணியாக மேற்கொண்டு வருகிறேன்.
நான் எதிர்கட்சி உறுப்பினராக இருந்த போது எந்த அளவிற்கு தனிநபர்கள் தேவையை கண்டறிந்தேனோ, தற்போது அதைவிட வேகமாக கூடுதல் தகவல்கள் சேகரித்து, திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறோம். இன்றைக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வாகனங்கள், ஸ்மார்ட் போன்கள்இ சமூக நலத்துறை சார்பில் திருமண உதவித் தொகை, தாலிக்கு தங்கம், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தேய்ப்பு பெட்டி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மை நலத்துறை சார்பில் தேய்ப்பு பெட்டி, தையல் இயந்திரம் மற்றும் வருவாய் துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா என மொத்தம் 343 பயனாளிகளுக்கு ரூ.21904305 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. குறிப்பாக, 195 நபர்களுக்கு வீட்டுமனை பட்டா,58 நபர்களுக்கு ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் நிதி உதவியும் வழங்கப்பட்டிருக்கிறது என ,தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் வார்டு 51 சப்பாணி கோயில் தெருவில் அமைக்கப்பட்ட புதிய பேவர் பிளாக் சாலை, வார்டு 57 சோனையார் கோயில் தெருவில் அமைக்கப்பட்ட புதிய சிமெண்ட் சாலை, வார்டு 57 பிள்ளைமார் தெருவில் அமைக்கப்பட்ட புதிய சிமெண்ட் சாலை, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் தனியார் பங்களிப்புடன் ஆதிமூலம் மாநகராட்சி ஆரம்ப பள்ளி, எஸ்.எஸ் காலனி மாநகராட்சி ஆரம்ப பள்ளி, மாநகராட்சி சுந்தரராஜபுரம் ஆரம்ப பள்ளி, மாநகராட்சி கம்பர் மேல் நிலைப் பள்ளி, வெள்ளி வீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் திரு.வி.க மாநகராட்சி மேல் நிலைப் பள்ளியில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகளை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் , திறந்து வைத்தார். மேலும், மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் முதல் ஊட்டி வரை செல்லும் புதிய பேருந்து வழித்தடத்தையும், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *