• Thu. May 2nd, 2024

15 ஆண்டுக்குப் பின் மாசி மாத முதல் பெட்டி எடுக்கும் திருவிழா – கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்பு

ByN.Ravi

Mar 11, 2024

திருமங்கலம் அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ அய்யனார் திருக்கோயிலில் மகா சிவராத்திரி தினத்தை ஒட்டி, 15 ஆண்டுக்குப் பின் மாசி மாத முதல் பெட்டி எடுக்கும் திருவிழா – கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்பு.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த சாத்தங்குடி கிராமத்தில் பழமை வாய்ந்த ஶ்ரீ அய்யனார் திருக்கோயில் அமைந்துள்ளது. இத் திருக்கோயிலில், கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு , மாசி மாத முதல் பெட்டி எடுக்கும் திருவிழா நடைபெற்றது.
முன்னதாக, ஸ்ரீ அய்யனார் சாமி ஆபரணங்கள் கொண்ட பெட்டியை மலர்களால் அலங்கரிக்கப்பட்டும், சந்தனம், பன்னீர் போன்ற நறுமணங்களால் பூஜிக்கப்பட்ட பின்பு, கோயில் பூசாரிகளால் தலைச் சுமையாக , கிராம முக்கிய வீதிகளின் வழியாக மேளதாளத்துடன் அழைத்து வரப்பட்டு, திருக்கோயிலை அடைந்த பின்பு , அந்த பெட்டியை சாமியின் பீடம் அமைந்துள்ள இடத்தில் வைத்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, திருமங்கலம், சாத்தங்குடி , கண்டு குளம் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழா காரணமாக சாத்தங்குடி கிராமமே களை கட்டியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *