• Fri. Mar 31st, 2023

ஆளுநர்களுக்கு காதுகள் கிடையாது போல …முதல்வர் கடும் தாக்கு..!!

ByA.Tamilselvan

Mar 9, 2023

பாஜக ஆளுனர்களுக்கு காதுகள் இல்லை. வாய் மட்டும் இருக்கு என்றே தோன்றுகிறது என உங்களில் ஒருவன் கேள்வி பதில் நிகழ்ச்சியில் முதல்வர் பதில்
உங்களில் ஒருவன் கேள்வி பதில் நிகழ்ச்சியில் , முதல்வர் ஸ்டாலின் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ஆளுநர் அரசியலில் தலையிடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால் மத்திய அரசின் ஆளுநர்கள் இதன்படி நடப்பார்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ஸ்டாலின் , என்னைப் பொறுத்தவரை ,நான் கவனித்தவரை ஆளுனர்களின் செயல் பாடுகள் சற்று முரண்பாடாகவே இருக்கிறது . ஏனெனில் அனைத்து பாஜக ஆளுனர்களும் , அரசு என்ன சொல்லுவது நாமென்ன கேட்பது என்னும் ரீதியில் தன்னிச்சையாக செயல்படுவது பார்க்கும் போது வருத்தமாக உள்ளது .அதே சமயம் ஆளுநர்களுக்கு காதுகள் இல்லை போல.. ஆனால் வாய் மட்டும் பேச வரும் என்று நினைக்கத் தோன்றுகிறது .
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு நிரந்தரமாக தடை விதிக்கும் வகையில் தமிழ் நாடு அரசால் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட தடைசட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிவிட்டார். தமிழ்நாடு நிறைவேற்றும், மக்களுக்கு நலன் பயக்கும் திட்டங்கள் அடங்கிய சட்ட மசோதாக்கள் ஆளுநர் அவர்கள் முடிவு எடுக்க காலதாமதம் செய்வதோடு கிடப்பில் போடப்படுவது மிக்க வருத்தமாக உள்ளது. மக்கள் நலனை கருதி விரைந்து முடிவு எடுக்காமல் திருப்பி அனுப்புவது நல்லதல்ல. உச்சநீதிமன்ற சாசன அமர்வு தெள்ளத்தெளிவாக ஆளுநர்கள் அரசியல் நகர்வுகளில் தலையிடக் கூடாது என்று , அறிக்கை விட்ட போதிலும் ஆளுநர் இப்படி அரசிற்கு எதிராக செயல்படுவது , பார்த்தால் பாஜக ஆளுனர்களுக்கு காதுகள் இல்லை. வாய் மட்டும் இருக்கு என்றே தோன்றுகிறது என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *