தேசதந்தை மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) உடல்நலக்குறைவால் காலமானார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
மகாத்மா காந்தி – கஸ்தூரிபாய் காந்தியின் மகன் மணிலால் காந்தியின் மகன் தான் 89 வயதான எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான அருண் காந்தி ஆவார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகலில் கோலாப்பூரில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.ஏப்ரல் 14, 1934இல் டர்பனில் மணிலால் காந்தி மற்றும் சுசீலா மஷ்ருவாலா ஆகியோருக்குப் பிறந்த அருண் காந்தி தன்னை சமூக ஆர்வலராகவும், எழுத்தாளருமாக வெளிக்காட்டி கொண்டார்.
மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி காலமானார்
