• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கலைஞர் செம்மொழி தமிழ் விருதுகள் வழங்கும் விழா…!!

Byகாயத்ரி

Aug 22, 2022

சென்னை, பெரும்பாக்கத்தில் கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கலைஞர் மு. கருணாநிதியின் முயற்சியினால் இந்தியாவில் முதல் முறையாகத் தமிழ் மொழியானது 2004-ம் ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சொந்த நிதியிலிருந்து ரூ.1 கோடி நிதியினை வழங்கி கலைஞர்.மு.கருணாநிதி செம்மொழித் தமிழாய்வு அறக்கட்டளை நிறுவப்பட்டது. இதன் வாயிலாக ஆண்டுதோறும் கலைஞர்.மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2020, 21, 22-ம் ஆண்டுக்களுக்கான கலைஞர் செம்மொழி தமிழ் விருதுகள் இன்று வழங்கப்பட்டுள்ளது. 3 பேருக்கு செம்மொழி தமிழ் விருதினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.2020, 2021, 2022ஆம் ஆண்டுகளுக்கான கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் இன்று வழங்கப்பட்டுள்ள நிலையில் 2020,21,22க்கான செம்மொழித் தமிழ் விருதுகளை
முனைவர் க.நெடுஞ்செழியன், முனைவர் ழான் லூய்க் செவ்வியார், முனைவர் ம.இராசேந்திரனுக்கு வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அத்துடன்சென்னை பெரும்பாக்கதில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் அரங்கில் நடைபெற்ற கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 3000 ஆண்டு பழமை வாய்ந்த தமிழுக்கு செம்மொழி என்று தகுதி பெற்று தந்ததும் திமுக அரசு தான்; செம்மொழி தகுதி வழங்க வேண்டுமென கலைஞர் எடுத்த முயற்சியும், அவர் பணியையும் நாடு நன்றாக அறியும். தமிழர்கள் வாழும் இந்த தாய் நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய அரசு தான் நம்முடைய திமுக; மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட தலைநகருக்கு சென்னை என்று அதிகாரப்பூர்வமாக பெயர் சூட்டிய அரசுதான் திமுக அரசு என்றார்.