• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சிவகங்கையில் ஆயுதப் படை காவலர் தனது வீட்டில் தூக்கிட்ட நிலையில் இறப்பு

ByG.Suresh

Apr 28, 2024

சிவகங்கை ஆயுதப்படையில் முதல் நிலை காவலராக பணிபுரிபவர் சிவசங்கரன் (30)
இவர் ஆயுதப்படை குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சிவசங்கரன் காரைக்குடியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார். பணி முடித்து காலை ஆயுதப்படை குடியிருப்பில் உள்ள தனது வீடு திரும்பியுள்ளார். மாலை நீண்ட நேரமாக வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சந்தேகப்பட்டு உடைத்து பார்த்த பொழுது வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சிவசங்கரன் இறந்து கிடந்துள்ளார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டோங்கரே பிரவீன் உமேஷ், துணை போலிஸ் சூப்பிரண்டு சிபி சாய் சௌந்தர்யன், ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

இறந்த காவலர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
.போலீசார் நடத்திய விசாரணையில், சிவசங்கரன் சிவகங்கை வ உ சி தெருவை சேர்ந்தவர் என்றும் இவரது மனைவி பெயர் லட்சுமி பிரியா தற்பொழுது லட்சுமி பிரியா பரமக்குடியில் உள்ள அவரது தாயார் வீட்டிற்கு சித்திரை திருவிழாவிற்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. சிவசங்கரன் குடும்ப பிரச்சனையில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.