• Fri. Dec 13th, 2024

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியுடன் அர்ஜுன் சம்பத் சந்திப்பு

Byதரணி

Jul 26, 2022

சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியுடன் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் சந்தித்து பேசினார்.

75 வது ஆண்டு சுதந்திர தின விழா அமுத பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதனைக் கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதியில் அனைத்து வீதிகளில் தேசியக்கொடி பறக்க விட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பில் மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர்களை கவுரவிக்கும் வகையில் சிலைகள் மணிமண்டபங்கள் வீடுகளுக்கு சென்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மாலை அணிவித்து வருகிறார். இந்நிலையில் சிவகாசி அருகே திருத்தங்கல்லில் அதிமுக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியுடன் அவரது இல்லத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் சந்தித்து பேசி தேசியக் கொடியை வழங்கினார்.