• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஹன்சிகாவுக்கு வில்லனாகும் ஆரி… குஷியில் ரசிகர்கள்…

Byகாயத்ரி

Jun 14, 2022

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்த ஹன்சிகா இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வுசெய்து நடித்து வருகிறார்.

இதற்கு முன் இவர் மகா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தின் ஹன்சிகா தோற்றம் முன்பே வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள 4 படங்களில் நடித்து வருகிறார். இப்போது மற்றொரு புது படத்திற்கும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுவும் நாயகிக்கு முக்கியத்துவமுள்ள கதை அம்சத்தில் தயாராகிறது. இந்த படத்தை இகோர் இயக்குகிறார். இவற்றில் ஹன்சிகாவுக்கு வில்லனாக ஆரி நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆரி முன்பே ரெட்டை சுழி, நெடுஞ்சாலை, மாயா ஆகிய பல்வேறு படங்களில் நாயகனாக நடித்து இருக்கிறார். அண்மையில் வெளியாகிய நெஞ்சுக்கு நீதி படத்திலும் ஆரி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வில்லன் வேடத்திற்கு மாறும் கதாநாயகர்கள் பட்டியலில் இப்போது ஆரியும் இணைந்து உள்ளார். இவரின் இந்த அடுத்த பரிணாமம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.