• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தளபதி 66-இல் இவங்களா ஹீரோயின்?

தமிழ் மற்றும் தெலுங்கு என பைலிங்குவல் படமாக உருவாக உள்ள தளபதி 66 படத்தை தோழா, மகரிஷி உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி இயக்குகிறார். இந்த மாதமே இந்த படத்திற்கான பூஜை போடப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. பீஸ்ட் படம் வெளியான பிறகு தான் ஏப்ரல் இறுதி வாரத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்றும், இந்த படத்தில் நடிகர் விஜய் டபுள் ஆக்‌ஷனில் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாஸ்டர், பீஸ்ட் என ஒவ்வொரு முறையும் எப்படியாவது விஜய்யுடன் ஜோடி போட்டு நடித்து விட வேண்டும் என நினைத்து வந்த நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகா மந்தனாவுக்கு தான் அந்த ஜாக்பாட் அடித்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஷங்கர் படத்தில் கியாரா அத்வானி பிசியாக இருப்பதால், புஷ்பா பட ஹீரோயின் ராஷ்மிகாவையே தளபதி 66 படத்துக்கும் ஹீரோயினாக புக் செய்து விடலாம் என படக்குழு ஒரே முடிவுடன் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் இன்னொரு ஹீரோயினுக்கும் வாய்ப்பிருக்கலாம் என்கிற பேச்சுக்களும் அடிபட்டு வருகின்றன.