அரசியல் டுடே.காமில் நேற்று மாலையில் “நான் அப்படித்தான் பணத்தை மூட்டை மூட்டையாக வாங்குவேன்.., விருதுநகர் புவியியல் துறை செல்வசேகரின் அடாவடி! நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்..? என்ற தலைப்பில் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம். இதைக்கண்ட முதலமைச்சர் ஸ்டாலின் செல்வசேகரை பணிமாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளார்.
![](https://arasiyaltoday.com/wp-content/uploads/2022/04/WhatsApp-Image-2022-04-23-at-12.57.57-PM-1024x568.jpeg)
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் துணை இயக்குனர் செல்வசேகரன் செய்த தவறுகளைப் பற்றி விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம். இந்தச் செய்தியில், “எனக்கு மண்ணை பொன்னாக்காவும் தெரியும். கல்லை பணமாக்காவும் தெரியும். நான் சொல்வதுதான் சட்டம். அதுதான் நீதி. முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரிஷன் எனக்கு மிகவும் நெருக்கமானவர் அதனால நான் என்ன சொல்றனோ அதை மட்டும் செய்யுங்க” என்று விருதுநகர் புவியியல் மற்றும் சுரங்கத் துறையில் அலுவலர்களை மிரட்டி தனி ராஜ்யத்தை நடத்தி பண மூட்டைகளை துணை இயக்குநர் குவித்து கொண்டு இருக்கிறார். இதை பற்றி உங்கள் டிஜிட்டல் பத்திரிகையில் எழுத மாட்டீங்களா? ஏன் இப்படி கேட்கிறீங்க அதெல்லாம் தப்பிருந்தா தராளமா பதிவிடுவோம் என்று உடனே விருதுநகரில் ஆஜராகி விசாரித்ததில், செல்வசேகரைப் பற்றி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஊழியர்களே மிகத்தெளிவாகப் பேசினார்கள்.
விவசாயிகள் பட்டா வைத்திருக்கின்ற விளைநிலங்கள்ல அரசின் அனுமதி பெற்ற பிறகுதான் மண்ணை எடுக்கணும்னு விதி இருந்தாலும் கூட போலியான விவசாயிகளை, அதுவும் குறிப்பா விவசாயியே அல்லாத பட்டா நிலங்களில் உள்ள மண்ணை சுரண்டி விக்கிறதுக்கு துணை போய்கிட்டு இருப்பதாகவும், கிணற்றுக் கிராவலை அள்ளி அப்புறப்படுத்துவதற்கு ஒருவாரம், பத்துநாள், அனுமதி கொடுத்து விட்டு, மற்ற சுற்றி உள்ள கிராமங்களில் மண்ணை எடுக்க அனுமதி கொடுப்பதாகவும் கூறினர். இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, “எனக்கு மண்ணை பொன்னாக்காவும் தெரியும். கல்லை பணமாக்காவும் தெரியும். நான் சொல்வதுதான் சட்டம். அதுதான் நீதி முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரிஷன் எனக்கு மிகவும் நெருக்கமானவர் அதனால நான் என்ன சொல்றனோ அதை மட்டும் செய்யுங்க”ன்னு கூட வேலை பார்க்கிற எங்களையே மிரட்டுனாரு. இது தவிர அமைச்சர் துரைமுருகனுக்கு நான் பணம் கட்டுக்கட்டா கொடுக்கிறேன் என்று செல்வசேகரன் கூறிவருவதாகவும் ஊழியர்கள் குறிப்பிட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து நமது அரசியல் டுடே சார்பில், குற்றம்சாட்டப்பட்ட செல்வசேகரைத் தொடர்பு கொண்டு பேசியபோது, அதற்குத் தகுந்த விளக்கம் சொல்லாமல், நமது கைபேசியைத் துண்டித்ததால் இந்த விசயத்தை புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் இயக்குனர் நிர்மல்ராஜுக்கு கொண்டு சென்றோம். அவரும் பொறுப்பாக நம்மிடம், செல்வசேகர் மீது குற்றச்சாட்டுகள் குவிந்து கொண்டுதான் இருக்கின்றன. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்போவது உறுதி என்றும் தெரிவித்திருந்தார். இந்தச் செய்தியை நேற்று மாலை, “நான் அப்படித்தான் பணத்தை மூட்டை மூட்டையாக வாங்குவேன்.., விருதுநகர் புவியியல் துறை செல்வசேகரின் அடாவடி! நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்..? என்ற தலைப்பில் விரிவாக அரசியல் டுடே.காமில் வெளியிட்டிருந்தோம். இதைக்கண்ட முதலமைச்சர் ஸ்டாலின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளிடம் அவர உடனே விருதுநகர்ல இருந்து தூக்க நடவடிக்கை எடுங்க என்று உத்தரவிட்டிருக்கிறார்.
![](https://arasiyaltoday.com/wp-content/uploads/2022/04/WhatsApp-Image-2022-04-23-at-1.14.07-PM-1024x575.jpeg)
இதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் நிர்மல்ராஜ்..,
துணை இயக்குனர் செல்வசேகர் மேல ஒண்ணா, இரண்டா பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கிறது. இதைத் தொடர்ந்து அவரை விருதுநகரில் இருந்து சென்னையில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் தலைமை அலுவலகத்திற்கும், தலைமை அலுவலகத்தில் பணியாற்றிய ஞானவேலை விருதுநகருக்கும் பணிமாறுதல் செய்து விட்டோம். இதெல்லாம் உங்கள் செய்தி வந்த இரண்டு மணி நேரத்தில் நடந்திருக்கிறது என்றார் பொறுப்பாக.
இதைப் பார்த்து விட்டு பல அதிகாரிகள் திருந்தினால் சரி.