• Sat. Mar 28th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

ஒட்டன்சத்திரம் தொகுதியில் போட்டியிடும் அர.சக்கரபாணி..,

ByS.Ariyanayagam

Mar 28, 2026

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து 6 முறை (1996 முதல் 2021 வரை) வெற்றி பெற்று, தற்போது தமிழக அரசின் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சராக பணியாற்றி வரும் திரு.அர.சக்கரபாணி அவர்களின் சுய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

​ தனிப்பட்ட விவரங்கள்

​ பெயர் :
அர.சக்கரபாணி
(R.Sakkarapani)

​ தந்தையின் பெயர் : திரு.ரெங்கசாமி கவுண்டர்

​ பிறந்த தேதி:
14 ஏப்ரல் 1961,
வயது (65)

​ சொந்த ஊர்: காளியப்பக்கவுண்டன்பட்டி (புங்கவலசு), கள்ளிமந்தையம் அஞ்சல்
ஒட்டன்சத்திரம் வட்டம்
திண்டுக்கல் மாவட்டம்.

​ கல்வித் தகுதி:
பி.ஏ. (பொருளாதாரம்) – மதுரை அமெரிக்கன் கல்லூரி (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்).

​ தொழில் : விவசாயம்.

​ அரசியல் பயணம் மற்றும் பொறுப்புகள்:

​அரசியலில் அடிமட்டத்திலிருந்து வளர்ந்த இவர், திமுகவின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்:

​ சட்டமன்ற உறுப்பினர் : ஒட்டன்சத்திரம் தொகுதியிலிருந்து தொடர்ந்து 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் (1996, 2001, 2006, 2011, 2016 மற்றும் 2021).

​ அரசுப் பதவிகள்:

​2006 – 2011: தமிழக அரசின் தலைமைக் கொறடா.
​2011 – 2021: சட்டமன்ற திமுக கொறடா.
​2021 முதல்: தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்.

​ கட்சிப் பதவி:
தற்போது திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.