

ஏஆர் ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் ஹலிதா ஷமீமின் ’மின்மினி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்!
இயக்குநர் ஹலிதா ஷமீமின் ‘மின்மினி’ படத்தில் அகாடமி விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமாக இருப்பது மகுடத்தின் மீது வைரக்கல் போல சிறப்பான தருணம். முன்னணி இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் குடும்பத்தில் இருந்து வந்த கதீஜா, ஏற்கனவே பல பாடல்களில் தனது குரல் மூலம் இசை ஆர்வலர்களின் கவனத்தை வென்றுள்ளார். ‘மின்மினி’ படத்தின் மூலம் அவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் என்ற செய்தியை படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.
‘மின்மினி’ படத்தை ஹலிதா ஷமீம் எழுதி இயக்குகிறார், மனோஜ் பரமஹம்சா தயாரித்து ஒளிப்பதிவு செய்துள்ளார். நடிகர்களின் உண்மையான வயதையும் பருவத்தையும் திரையில் காட்ட வேண்டும் என்பதற்காக எட்டு வருடங்களாக காத்திருந்து ஒரு திரைப்படத்தை படமாக்கும் அதன் முயற்சி சினிமா பார்வையாளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படம் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது.
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஆங்கர் பே ஸ்டுடியோவுடன் இணைந்து ‘மின்மினி’ படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்தில் எஸ்தர் அனில், பிரவின் கிஷோர், கௌரவ் காளை, பிரவின் மற்றும் கௌரவ் ஆகியோர் முதன்மை நடிகர்களாக நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.
’பூவரசம் பீப்பி’, ’சில்லு கருப்பட்டி’, ’ஏலே’ மற்றும் ’லோனர்ஸ்’ (அமேசான் பிரைமில் வெளியான ஆந்தாலஜி ’புத்தம் புது காலை விடியாதா’வின் ஒரு பகுதி) உள்ளிட்ட விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ஹலிதா ஷமீமின் முந்தைய படைப்புகள் காரணமாக ‘மின்மினி’ படத்திற்கு பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன.
- முதல்வரிடம் பசுமை விருந்தினை பெற்றுக்கொண்ட ஆட்சியர் ஸ்ரீதர்…குமரிக்கு கிடைத்த பெருமை மிகுந்த பாராட்டு:முதல்வரிடம் பசுமை விருந்தினை பெற்றுக்கொண்ட ஆட்சியர் ஸ்ரீதர். தமிழ் நாட்டில் … Read more
- டப்பாங்குத்து திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..,விரைவில் திரைக்கு வர இருக்கும் மருதம் நாட்டுப்புற பாடல்கள் வழங்கும் திரைப்படம் “டப்பாங்குத்து”. இத்திரைப்படத்தின் பெயருக்கு … Read more
- சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் “அரண்மனை 4”..!குடும்பங்கள் கொண்டாடும் பேய்ப்படம், ரசிகர்கள் கொண்டாட மீண்டும் வருகிறது, அரண்மனை 4 ! சுந்தர் சி … Read more
- லைகா புரொடக்ஷனின் ‘லால் சலாம்’ படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது…திரு. சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும், அவர் மீண்டும் … Read more
- தூய்மை பணியில், கூடன்குளம் அணு மின் நிலையம் தொழிற்சாலை பாதுகாப்புப் படை..,கன்னியாகுமரி சூரிய அஸ்தமனம் பகுதியான கோவளம் ஊராட்சி பகுதியில் கூடன்குளம் அணு மின் நிலையம் தொழிற்சாலை … Read more
- சோழவந்தானில் காந்தி ஜெயந்தி விழா..!சோழவந்தான் எம்.வி.எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மகாத்மாகாந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அவரது முழு திருவுருவச் … Read more
- “ஒன் 2 ஒன்” படத்தின் பரபரப்பான ஃபர்ஸ்ட் லுக்..!சுந்தர்.C, அனுராக் காஷ்யப் இணைந்து மிரட்டும் “ஒன் 2 ஒன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! … Read more
- காந்தி சிலைக்கு கதராடை, சந்தனமாலை அணிவித்து துப்புரவு பணி செய்த பா. ஜ. க வினர்…மதுரை காந்தி பொட்டலில் உள்ள காந்தி சிலைக்கு, மதுரை மாநகர் மாவட்ட பா. ஜ. க. … Read more
- மதுரையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை.., போலீசார் விசாரணை…மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் மேலவாசல் பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து (வயது 37) … Read more
- விக்கிரமங்கலம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடத்துடன் மறியல்…சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கீழப்பட்டி கிராமத்தில் குடிநீர் சரிவர கிடைக்காததால் இக்கிராம … Read more
- மன்னாடிமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், வெங்கடேசன் எம். எல். ஏ பங்கேற்பு..,மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மன்னாடிமங்கலம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் … Read more
- கிராம சபை கூட்டங்களில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்…செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் முதலைக்குளம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு தலைவர் பூங்கொடிபாண்டி தலைமை தாங்கினார். … Read more
- பெருங்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்…மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக பரம்புபட்டி கிராமத்திற்கு செல்ல மாற்றுப்பதை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட … Read more
- துளிர் அறம் செய் மையம் அமைப்பின், குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்..,துளிர் அறம் செய் மையம், காயல்பட்டினம் அமைப்பின் சார்பில், குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார குழுவினரின் … Read more
- அக்.6ல் கர்நாடக அரசைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்..!தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி தண்ணீரைத் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து, வரும் 6ஆம் தேதி … Read more
