• Tue. Mar 17th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மாமன்னன் ப்ரோமோ வெளியிட்ட ஏ.ஆர்.ரகுமான்

ByA.Tamilselvan

Nov 28, 2022

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தின் ப்ரோமோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார்.
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ‘மாமன்னன்’ படப்பிடிப்பு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. இதைத்தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், தான் முதல் முறையாக மாமன்னன் படத்தின் மூலம் மாரிசெல்வராஜ் மற்றும் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் இயக்குனர் மாரி செல்வராஜ் பணியாற்றும் விதம் முற்றிலும் மாறுபட்டதாகவும், சுவாரஸ்யமாகவும் இருப்பதாக கூறியுள்ளார்.